MARC காட்சி

Back
அருள்மிகு குறுங்காலீசுவரர் கோயில்
245 : _ _ |a அருள்மிகு குறுங்காலீசுவரர் கோயில் -
246 : _ _ |a குறுங்காலீசுவரர், குசலவபுரீஸ்வரர்
520 : _ _ |a இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாகும். பிற்காலச் சோழர் கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. குறுங்காலீசுவரர் கோயில் கருவறையில் வடதிசை நோக்கி இறைவன் இருப்பதால் இது மோட்ச தலமாகவும், இங்குள்ள தீர்த்தம் பித்ரு பரிகார பூஜை செய்ய ஏற்ற இடமாகவும் கூறப்படுகிறது. இத்தலத்தில் வேறொரு சிறப்பும் உண்டு. அது யாதெனில், தர்மசம்வர்த்தினி என்னும் அறம் வளர்த்த நாயகி அம்பாளும் வடதிசை நோக்கி நின்றவாறு தனிச் சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். குறுங்காலீசுவரர் சிவன் கோயிலின் அருகில் வைகுண்டவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் அருகருகே அமைந்திருப்பதால் கோயம்பேடு பகுதி சோழர் காலத்திலோ, அதற்கு முன்னரோ பிரம்மதேயமாக இருந்திருக்கலாம். பிரம்மதேயமாக கொடுக்கப்பட்ட ஊர்களில் இவ்விரு சமயக் கோயில்களும் அமைவது இயல்பு. குறுங்காலீசுவரர் கோயிலின் தலவரலாறு இராமாயணத்தோடு தொடர்புபடுத்தப் படுகிறது. இது நோக்கத்தக்கது. இப்பகுதி பண்டு கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் நிலமாக இருந்திருக்க வேண்டும். கோ அம் பேடு என்று பிரித்து பொருள் கொண்டால் பெற்றங்களை கொண்ட அழகிய தலைவன் ஆண்ட பகுதி என்ற பொருளில் வருகிறது. பெற்றம் என்பது மாட்டுச் செல்வம். கோ என்பது தலைவனைக் குறிக்கும். அம்மன் கருவறையின் எதிரே ஈசானிய மூலையில், நவக்கிரக திருமுன் அமைந்துள்ளது. சாயா தேவி, உஷாதேவி இருபுறமும் இருக்க, சூரியன் பகவான் ஏழு குதிரை பூட்டிய தேரில் வீற்றிருப்பதும், அந்தத் தேரை சூரியபகவானின் தேர் சாரதி அருணன் ஓட்டுவது போலவும் அமைந்த காட்சியும், சூரிய பகவானைச் சுற்றிலும் மற்ற கிரகங்கள் இருப்பதும் இங்கு தனிச் சிறப்பாகும். இந்த ஈஸ்வரனை வணங்கி லவன், குசன் இருவரும் தோஷ நிவர்த்திப் பெற்றதால், இவரை வணங்குபவர்களின் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும். இத்திருத்தலத்தில் உள்ள முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார். அவர் தம் பாடலில இத்தலத்தை கோசை நகர் என்று குறிப்பிடுகின்றனார்.
653 : _ _ |a கோயம்பேடு, குறுங்காலீசுவரர் கோயில், மூன்றாம் குலோத்துங்கன், பிற்காலச் சோழர் கோயில், சிவன் கோயில்கள், சிவத்தலங்கள், தொண்டை மண்டல கோயில்கள், சென்னை மாநகரக் கோயில், சென்னை மாவட்டக் கோயில்கள்
700 : _ _ |a மதுரை கோ.சசிகலா
710 : _ _ |a மதுரை கோ.சசிகலா
902 : _ _ |a 044-24796237
905 : _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு / மூன்றாம் குலோத்துங்க சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 800 ஆண்டுகள் பழமையானது. பிற்காலச் சோழர் கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது.
914 : _ _ |a 13.07316848
915 : _ _ |a 80.19746082
916 : _ _ |a குறுங்காலீசுவரர்
917 : _ _ |a சோமாஸ்கந்தர்
918 : _ _ |a தர்மசம்வர்த்தினி (அறம் வளர்த்த நாயகி)
922 : _ _ |a பலாமரம்
923 : _ _ |a குசலவ தீர்த்தம்
925 : _ _ |a காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
926 : _ _ |a இரதஸப்தமி, மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, கார்த்திகை, பங்குனி உத்திரம்
927 : _ _ |a கல்வெட்டுகளில் சோழ அரசன் மூன்றாம் குலோத்துங்கன் பெயர் காணப்படுகிறது. இவ்வரசன் கி.பி. 1178 முதல் கி.பி. 1218 வரை நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளான். பாண்டியரை வென்று “மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளிய” என்ர விருதினைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டவன். இந்த விருதுப்பெயர், இக்கோயில் கல்வெட்டுகளில் வருகின்றது. கல்வெட்டுகளில் இவனுடைய ஆட்சியாண்டு 25 என வருவதால், இக்கோயில் கல்வெட்டுகள் கி.பி. 1203 ஆண்டளவில் பொறிக்கப்பட்டவை என்பது உறுதியாகின்றது. எனவே, கோயில் 800 ஆண்டுகள் பழமைகொண்டது எனத்தெளியலாம். ஒரு கல்வெட்டு, இதே ஊரைச்சேர்ந்த பேரையன் மகன் காளி ஆண்டான் என்ற திருஞானசம்பந்தன், கோயிலில் சந்திவிளக்கு எரிப்பதற்காகப் பசு ஒன்றையும் காசுகள் சிலவும் கொடையாகத் தந்துள்ளான் எனத் தெரிவிக்கிறது. கோயிலில் பூசைப்பணி புரிந்த சிவப்பிராமணர்கள், கொடையாளி கொடுத்த பசுவையும் காசுகளையும் பெற்றுக்கொண்டு சந்திவிளக்கு எரிக்கும் அறச்செயலை இடையூறின்றிக் கதிரவனும், நிலவும் உள்ளவரை பொறுப்பேற்றி நடத்துவதாக உறுதிமொழி அளிக்கும் செய்தி கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு பொறுப்பேற்ற சிவப்பிராமணர்கள் பலரது பெயர்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன. இப்பகுதி குலோத்துங்கசோழவளநாட்டிலும், புலியூர்க்கோட்டத்திலும் சேர்ந்திருந்தது. நாட்டுப்பிரிவாக மாங்காடு நாடு என்னும் பிரிவு கல்வெட்டில் குறிப்பிடப்பெறுகிறது. மாங்காடு, இப்போதும் இப்பகுதியில் இருப்பதைக் காண்கிறோம். கோட்டத்தைக் குறிக்கும் புலியூரும் (பல நாடுகளை உள்ளடக்கியதால்) சென்னையைச் சுற்றியுள்ள பெரும்பரப்பில் எங்கோ இருக்கவேண்டும். (சரியான தகவல்களைத் தேடியிருக்கவேண்டும்; ஆனால் செய்யஇயலவில்லை.) கல்வெட்டுகளில், ”கோயம்பேடு” என்றே இவ்வூர் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் “குறுங்கால் ஆண்டார்” என்னும் பெயரில் குறிப்பிடப்பெறுகிறார். (இங்கேயுள்ள “ஆண்டார்” என்னும் வழக்கு, கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் “ஆளுடையார்” என்று வழங்குவதைக் காண்கிறோம். பெரும்பாலான கோயில்களில் இறைவனின் பெயர், கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறும் பெயரினின்றும் வேறுபடும். இங்கே, இப்பொழுதும் இறைவனின் பெயர் “குறுங்காலீசுவரர்” என்னும் பெயரால் பழமையை இழக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோயம்பேடு என்னும் ஊர்ப்பெயரும் தன் பழம்பெயரை இழக்காமல் இருப்பது சிறப்பு.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கோயில் கருவறையில் இலிங்கம் ஆவுடையாருடன் சிறிய அளவில் காணப்படுகிறது. கருவறைத் திருச்சுற்றில் கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகிய திருவுருவங்கள் காணப்படுகின்றன. சண்டிகேசுவரருக்கு தனி திருமுன் அமைந்துள்ளது. கருவறைத் திருச்சுற்றில் சூரியன் நின்ற நிலையில் காணப்படுகின்றார். ஜூரகேஸ்வரர் மற்றும் பைரவர் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்திற்கு எதிரே உள்ள ஒரு மண்டபத்தில் காணப்படும் 16 தூண்களில் மிகவும் எழில் வாய்ந்த புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை நான்கு கைகள் கொண்ட மகிஷனும், தசமுக இராவணனும், சரபேஸ்வரரும் ஆவர்.
930 : _ _ |a ஸ்ரீராமரின் மகன்களான லவனும், குசனும் வணங்கிய சிவலிங்கமே, இன்றைய கோயம்பேடு குறுங்காலீசுவரர் என்பது ஐதீகம். எனவே இந்த கோயம்பேடு பகுதி முற்காலத்தில் குசவலபுரம் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கும் கூட, ‘குசலவ ஈசர்’ என்ற பெயரும் இருப்பது இதனை உறுதி செய்கிறது. வேள்விக் குதிரையை ராமன் தேடிக் கொண்டு வரும்போது இங்குள்ள ஆற்றின் கரையில் அமர்ந்ததால், அந்த பகுதிக்கு ‘அமர்ந்த கரை’ என்று அன்னாளில் பெயர் வந்தது. அதுவே தற்போது, ‘அமிஞ்சிகரை’ என்று வழங்கப்படுகிறது. வனவாசம் முடிந்து வந்த இராமர் குடிமக்களில் ஒருவனின் அவதூறான பேச்சைக் கேட்டு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சீதையை அழைத்துச் சென்று காட்டுக்குள் விட்டு வருமாறு லட்சுமணருக்கு ராமர் உத்தரவிட்டார். அதை ஏற்று லட்சுமணர், சீதையை அழைத்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் இப்போதைய கோயம்பேடு தர்ப்பைப் புற்கள், மாமரங்கள், பலா மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. கூவம் நதி புனித நதியாக ஓடிக் கொண்டிருந்தது. சீதையை அங்கு விட்டு, விட்டு லட்சுமணர் சென்றுவிட்டார். தனிமையில் விடப்பட்ட சீதை தன் நிலையை எண்ணி சத்தம் போட்டு கதறி அழுதார். திருவான்மியூர் வனப் பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கி இருந்த வால்மீகி முனிவர், தர்ப்பை சேகரிக்க வந்தார். சீதையின் அழுகுரல் கேட்டு சென்றவர், எல்லாவற்றையும் அறிந்தார். பிறகு சீதையை அவர் தன்னுடன் தங்க செய்து கவனித்துக் கொண்டார். சிறிது நாளில் சீதை லவன் எனும் மகனை பெற்றெடுத்தார். ஒருநாள் லவனை காணாததால் வால்மீகி முனிவர் தர்ப்பையை கிள்ளிப் போட்டு குசனை உருவாக்கினார். லவன், குசன் இருவரும் எல்லாவித பயிற்சிகளையும் கற்று சிறந்த வீரர்களாக தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் அயோத்தியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தை போக்க ராமர் அஸ்வமேத யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக யாகக் குதிரை ஒன்றை நாடெங்கும் உலா செல்ல அனுப்பினார். ராமர் அனுப்பிய குதிரை என்பதால், எல்லா நாட்டு மன்னர்களும் அதற்கு மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்த அந்த குதிரையை லவன், குசன் இருவரும் சேர்ந்து கட்டிப் போட்டனர். அதனால் தான் இந்த இடம் கோயம்பேடு என்று அழைக்கப்படுகிறது. கோ- அரசன், அயம்- குதிரை, பேடு- கட்டுதல் என்று பொருள்). இதை அறிந்ததும் படை வீரர்களுடன் லட்சுமணர் அங்கு விரைந்தார். அவர்களை லவன், குசன் இருவரும் போரிட்டு தோற்கடித்து விரட்டியடித்தனர். இதனால் வெகுண்டடெழுந்த ராமர், தானே நேரடியாக போர் களத்துக்கு வந்தார். அவருடனும் சிறுவாபுரி எனுமிடத்தில் லவன், குசன் இருவரும் போரிட்டனர். அப்போது வால்மீகி விரைந்து வந்து, நீங்கள் போரிடுவது உங்கள் தந்தையுடன்தான் என்று விளக்கமாக எடுத்துக் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த லவன், குசன் இருவரும், எங்கள் தந்தையுடன் சண்டையிட்ட தோஷம் நீங்க ஏதாவது வழி சொல்லுங்கள் என்று வால்மீகியிடம் கேட்டனர். அதற்கு வால்மீகி முனிவர், "சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, அதற்கு பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும்'' என்றார். அதன்படி லவன், குசன் இருவரும் குதிரையை கட்டிப் போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவினார்கள். தங்கள் உயரத்துக்கு ஏற்ப உயரம் குறைந்த லிங்கத்தை அவர்கள் நிறுவி வழிபட்டனர். இதனால் அவர்களது தோஷம் நீங்கியது. அவர்கள் வழிபட்ட லிங்கத்துக்கு "குசலவபுரீஸ்வரர்'' என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில் இலிங்கம் மண் மூடியது. சோழமன்னன் ஒருவன் தேரின் மீது ஏறி சென்றபோது தேர்ச்சக்கரம் பட்டு அவ்விடத்தில் இரத்தம் பீறிட்டது. மன்னன் அவ்விடத்தில் இலிங்கம் இருப்பதை கண்டு, வணங்கி வழிபட்டான். தேர்ச்சக்கரம் பட்டதால் பாணம் பாதி புதைந்து குறுகிய வடிவாக காட்சியளித்ததால் அது குறுங்காலீஸ்வரர் என்ற பெயரை பெற்றது.
932 : _ _ |a நுழைவாயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் காணப்படுகின்றது. இராஜகோபுரம் வடக்கு திசையில் காணப்படுகிறது. உள்ளே சென்றால் கொடி மரம், பலி பீடங்களை காணலாம். அடுத்து நான்கு கால் மண்டபத்தில் நந்தி சிற்பம் உள்ளது.. நந்தியை கடந்து சென்றால் 40 தூண்களுடன் கூடிய மகாமண்டபத்தை அடையலாம். மகாமண்டப தூண்களில் சிற்பங்கள் காணப்படுகின்றன லவ, குச இருவரும் அஸ்வமேதயாக குதிரையைக் கடிவாளத்தோடு பிடித்துக் கொண்டிருக்கும் சிற்பம் கலை நயம் மிக்கது. இந்த மண்டபத்தின் நுழையும் பகுதியில் விசாலாட்சி சமேத விசுவநாதர் சன்னதியும், சோமாஸ்கந்தர் சன்னதியும் உள்ளன. அடுத்து இறைவன் வீற்றிருக்கும் கருவறை உள்ளே செல்லுமுன் அர்த்த மண்டபத்தில் இருபுறமும் துவாரபாலகர்கள் நிற்கின்றனர். குறுங்காலீசுவரரின் இடது பக்கம் துயர் தீர்க்கும் தும்பிக்கை விநாயகரும், வலது பக்கம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். கருவறையில் சுமார் 4 அங்குல உயரமே கொண்ட லிங்க பாண வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். கருவறை விமானம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. விமானம் திராவிட பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதளம் முதல் கூரை வரை கற்றளியாகவும், அதற்கு மேல் உள்ள தளப்பகுதி சுதையாலும் அமைந்துள்ளன. கருவறைத் திருச்சுற்றில் கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகிய திருவுருவங்கள் காணப்படுகின்றன. சண்டிகேசுவரருக்கு தனி திருமுன் அமைந்துள்ளது. கருவறைத் திருச்சுற்றில் சூரியன் நின்ற நிலையில் காணப்படுகின்றார். ஜூரகேஸ்வரர் மற்றும் பைரவர் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்திற்கு எதிரே உள்ள ஒரு மண்டபத்தில் காணப்படும் 16 தூண்களில் மிகவும் எழில் வாய்ந்த புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை நான்கு கைகள் கொண்ட மகிஷனும், தசமுக இராவணனும், சரபேஸ்வரரும் ஆவர். தர்மசம்வர்த்தினி என்னும் அறம் வளர்த்த நாயகி அம்பாளும் வடதிசை நோக்கி நின்றவாறு காட்சியளிக்கிறார்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோயில், வடபழனி முருகன் கோயில், வடபழனி சிவன் கோயில்,
935 : _ _ |a சென்னை மாநகரின் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேம்பாலம் செல்லும் வழியில், குறிகைத் (signal) தாண்டி மேற்கு திசையில் இடதுபுறம் திரும்பினால் சிவன்கோவில் தெரு வரும். அந்தத் தெருவில் நடந்து சென்றால், வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6.00-12.30 முதல் மாலை 4.30-8.30 வரை
937 : _ _ |a கோயம்பேடு
938 : _ _ |a சென்னை கோயம்பேடு
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a சென்னை மாநகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000095
barcode : TVA_TEM_000095
book category : சைவம்
cover images TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_சூரியன்-0007.jpg :
Primary File :

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_சூரியன்-0007.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_கோபுரம்-0001.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_திருமதில்-0002.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_பலிபீடம்-0003.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_நந்தி-0004.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_மகாமண்டபம்-0005.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_இலவகுசன்-0006.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_கல்வெட்டு-0008.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_கணபதி-0009.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_தட்சிணாமூர்த்தி-0010.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_விஷ்ணு-0011.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_பிரம்மன்-0012.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_துர்க்கை-0013.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_ஜுரஹேஸ்வரர்-சண்டிகேஸ்வரர்-0014.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_தாங்குதளம்-0015.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_முனிவர்-0016.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_வீரன்-0017.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_சிவவழிபாடு-0018.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_வீரபத்திரர்-0019.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_கண்ணப்பர்-0020.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_பிரம்மன்-0021.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_மன்மதன்-0022.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_ரதி-0023.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_நடராஜர்-0024.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_அதிகாரநந்தி-0025.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_காளி-0026.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_பிரதோஷமூர்த்தி-0027.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_மோகினி-0028.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_நரசிம்மர்-0029.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_காலாந்தகமூர்த்தி-0030.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_தட்சிணாமூர்த்தி-0031.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_வைகுந்தநாதர்-0032.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_மகிஷன்-0033.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_மகாவிஷ்ணு-0034.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_சிவன்-0035.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_கிருஷ்ணன்-0036.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_நந்தி-0037.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_தசமுக-இராவணன்-0038.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_பார்வதி-0039.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_இலிங்கோத்பவர்-0040.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_ஏகபாதமூர்த்தி-0041.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_பிட்சாடனர்-0042.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_நந்திகேஸ்வரர்-0043.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_கஜசம்ஹாரமூர்த்தி-0044.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_மகிஷாசுரமர்த்தினி-0045.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_கஜசம்ஹாரமூர்த்தி-0046.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_அப்பர்-0047.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_அருச்சுனன்-தவம்-0048.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_சிவன்-வேடன்-0049.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_அனுமன்-0050.jpg

TVA_TEM_000095/TVA_TEM_000095_குறுங்காலீசுவரர்-கோயில்_சரபேஸ்வரர்-0051.jpg